ஜூன் முதல் வாரம்

பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள் 

ஏசாயா 65:17

  • இதோநான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

பிறந்தநாள் 
07.06.21- செல்வி. அகிலா 
10.06.21- திருமதி. ரெனீபா மகேஷ்குமார். 
12.06.21செல்வன். சாம்நரேஷ் 

திருமணநாள்
07.06.21- தனசீலன் & ராஜகுமாரி
13.06.21- மனோகரன் & கவிதா

வாழ்த்துக்கள்

C.S.I பொறியியல் கல்லூரி
கேத்தி, ஊட்டி.

    தென்னிந்திய திருச்சபை கோவை பேராயத்தின் சார்பாக நடத்தப்படுகின்ற சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி கடந்த 23 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு பொறியியல் இளநிலை படிப்பில் 6 பிரிவிகளும், மேற்படிப்பில் 4 பிரிவுகளும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொறியியல் படிப்பில் 12 ஆம் வகுப்பு முடித்த இயற்பியல்(Physics),  வேதியியல்(Chemistry), கணிதம்(Mathematics), மற்றும் கணிப்பொறியியல்(Computer Science) படித்த மாணவர்கள் மற்றும் தொழிற்கல்வி(Vocational) படித்த மாணவர்களும் சேரலாம். டிப்ளமோ முடித்த மாணவர்கள் நேரடியாக 2 ஆம் ஆண்டில் சேரலாம். எங்கள் கல்லூரியில் சிறப்பம்சமாக தேசிய மாணவர்படை (NCC), தேசிய சமூக சேவை (NSS), 100 சதவீத வேலைவாய்ப்பு வசதிகள், விளையாட்டு துறை மற்றும் அனைத்து துறை association களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. SC, ST, BC(AD)(மதம் மாறிய கிறிஸ்தவர்கள்), மாணவர்களுக்கு கல்வி கட்டணம் அரசிடமிருந்து கிடைப்பதால் இவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஓராண்டிற்கான குடும்ப வருமானம் இரண்டு இலட்சத்திற்க்குள் இருக்க வேண்டும். விடுதி அல்லது பேருந்து வசதி நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் உண்டு. அனுபவமுள்ள பேராசிரியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களும் உள்ளனர். கல்லூரியின் முன்னாள் மாணவ மாணவியர்கள் பல துறைகளில், பல மேலை நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். மேலும் மாணவர்கள் நல்லொழுக்கத்துடன் வளர தினமும் காலை வழிபாடுகள் மற்றும் சிறப்பு கூட்டங்களும்(Retreats and Camps) நடைபெறுகின்றன.


நன்றி

 மலர் 08 
07.06.2021 

Comments